tamilnadu

சேவூர் அருகே 133 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

அவிநாசி, ஆக. 8- அவிநாசியை அடுத்த சேவூரில் தனியார் நூற்பாலை யில் பணிபுரிந்து வந்த 133 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் சேவூர் அருகே ஆலத்தூர் மேடு பகுதியில் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்நூற்பாலைக்கு திருவண்ணாமலை மாவட் டத்தில் இருந்து, கொரோனா பொதுமுடக்கத்திற்கிடையில் உரிய அனுமதியின்றி 40க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுமிகள் இடைத்தரகர் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இது குறித்த தகவல் கிடைத்ததன் அடிப்படையில், அங்கு பணி யில் அமர்த்தப்பட்டிருந்த 14 முதல் 18 வயதுக்கு உள்பட்ட 37 சிறுமிகள், 3 சிறுவர்கள் என 40 வளரிளம் பருவத்தினர் நூற் பாலையில் இருந்து மீட்கப்பட்டனர். இதன்பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மேலும் ஏராளமான குழந்தைத் தொழிலாளர்கள் இன்னமும் நூற்பாலையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகப் புகார் வந்ததையடுத்து தொழிலா ளர் துறை, காவல் துறை, மருத்துவப் பொதுசுகாதாரத் துறை, வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் நூற்பாலையில் புத னன்று 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வில், மேலும் பணியில் அமர்த்தப்பட்டிருந்த 14 முதல் 18 வயதுக்கு உள்பட்ட 133 சிறுவர் சிறுமிகள் மீட்கப் பட்டனர். மேலும் நூற்பாலையில் தனிமனித இடைவெளி யின்றி, முகக்கவசமின்றி தொழிலாளர்கள் பணியில் ஈடு பட்டிருந்ததால், நிர்வாகத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

;