tamilnadu

நீரழிவு நோய்க்கு  அதிக மருந்துடன் ஊசி போட்ட பெண் பலி

திருநெல்வேலி, மார்ச் 7- சேர்ந்தமரம் அருகே உள்ள வீரசிகாமணியைச் சேர்ந்த வர் அய்யப்பன். இவரது மனைவி வனிதா (34), பீடி சுற்றும்  தொழிலாளி. இவருக்கு நீரழிவு நோய் இருந்துள்ளது. இதற்காக அடிக்கடி அவரே ஊசி போட்டுக் கொள்வார்.  இந்நிலையில் கடந்த மார்ச் 5 அன்று அவருக்கு நீரழிவு  நோய் பாதிப்பு அதிகமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அதிக அளவில் மருந்து சேர்த்து ஊசி போட்டுள்ளார். இதையடுத்து வனிதாவின் உடல்நிலை பாதி க்கப்பட்டது. உடனடியாக அவரை  நெல்லை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்கா மல் வனிதா உயிரிழந்தார். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார்  வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.