tamilnadu

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி முக்கிய செய்திகள்

தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்த நடவடிக்கை ஞானதிரவியம் பேட்டி

திருநெல்வேலி, மே 24-தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை  நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற  ஞானதிரவியம் கூறினார்.வெற்றி பெற்று சான்றிதழை பெற்றஅவர்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்  கூறியதாவது-நான்குனேரிக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தை கொண்டு வர பாடுபடுவேன். தொழில்வளத்தை மேம்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.   தாமிரபர  ணி-கருமேனியாறு-நம்பியாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள், விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யபாடுபடுவேன்  என கூறினார்.  முன்னதாக வெற்றிபெற்று சான்றிதழை வாங்கிக் கொண்டு மையத்தில் இருந்து வெளியே வந்தஞானதிரவியத்துக்கு தாரை, தப்பட்டை முழங்க திமுகவினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

திருமணமான 21 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை

தூத்துக்குடி, மே 24தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்முத்து மகன் சுப்பையா.(34) தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த புவனேஸ்வரி (23) என்ற பெண்ணுக்கும் கடந்த கடந்த2ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில், சுப்பையா வியாழனன்று தனது மாமனார் வீட்டிற்கு சென்றாராம் .அங்கு மதியம் வீட்டின் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து தகவல் அறிந்து சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார். மேலும், அவரது மரணத்திற்கான காரணம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 21 நாட்களில் பதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.