tamilnadu

ஜாக்டோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்யக் கோரிக்கை

திருநெல்வேலி, ஆக.2- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நெல்லை மாவட்ட மையக்குழு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநில செய லாளர் சோ.முருகேசன்,  செயற் குழு உறுப்பினர் மு.பிரமநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாநில தலைவர் மூ.மணி மேகலை, இந்தியப் பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பின் மாநில குழு வின் முடிவுகளை விளக்கி கூறி னார்.  மாவட்டச் செயலாளர் செ.பால்ராஜ் வரவேற்றுப் பேசி னார். பொருளாளர் சங்கை.ஞா. பால்ராஜ் நிறைவாக நன்றி கூறி னார். கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட் டணி இயக்கம் உதயமான நாளான ஆகஸ்ட் -2 இயக்க நாளாக கடைபிடிப்பது. அன்று முழு ஊரடங்காக இருப்பதால் ஆக.3 ஆம் தேதி அனைத்து வட்டார கல்வி அலுவலகம் முன்பு தனிமனித இடைவெளியுடன் இயக்க கொடியேற்றுவது,  ஜாக்டோ- ஜியோ கூட்ட மைப்பு சார்பில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவ டிக்கைகளை முற்றிலுமாக ரத்து செய்வது உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்தியப்பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடை பெறும் மாலை நேர ஆர்ப்பாட் டத்தில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

;