அரியலூர்: அரியலூரில் எல்.ஐ.சி முகவர் மாநாட்டில் ஜனவரி 23 முதல் 27 வரை நடைபெற உள்ள சி.ஐ.டி.யு அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்வது, எல்ஐசி பாலிசிகளுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அரியலூரில், எல்ஐசி முகவர் சங்கத்தின் 3-வது மாநாடு கிளைத்தலைவர் எம்.இரா மலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கோட்டப் பொது செயலாளர் ஜி.கோபாலகிருஷ்ணன் மாநாட்டு கொடி ஏற்றினார். கோட்டத்தலைவர் பி.தங்கமணி பேரணியை துவக்கி வைத்தார். எம்.செல்வராஜ் ஆர்.எஸ்.வெங்கடகிருஷ்ணன் எ.கே.ராமலிங்கம் எஸ்.ஜெயக்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். திகார் மாவட்ட தலைவர் எம்.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். கோட்ட பிரதிநிதி எஸ்.சவுரிராஜ் அஞ்சலி தீர்மானம் மற்றும் திகார் மாநில செயல் தலைவர் எ.பூவலிங்கம் மாநாட்டு துவக்கவுரை நிகழ்த்தினர். கிளை செயலாளர் கொடி.கிருஷ்ணன் அறிக்கை வாசித்தார். வரவு, செலவு அறிக்கையினை பொருளாளர் ஆர்.நெடுஞ்செழியன் வாசித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பிரிவு துரைசாமி, மாவட்டப் பொருளாளர் ஆர். சிற்றம்பலம், எ.ஐஐஇ எ ஊழியர்கள் சங்க கிளை மேலாளர் கே.கீதா, மகளிரணி கோட்ட துணை தலைவர் டி.மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். லிகாய் மாநிலச் செயலா ளர் என்.ராஜா நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வி.முருகானந்தம் நன்றி கூறினார்.