tamilnadu

img

மின்வாரியம் தனியார்மயமா? மின்சார ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, மே 19- மத்திய நிதி அமைச்சர் முதல் கட்டமாக யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்வாரியம் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெற கோரியும், இந்த இதைக் கண்டித்தும் கோரிக்கை முழக்க போராட்டம் திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்றது.  மின் வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு பொறியாளர்கள், ஊழியர்கள் என சுமார் 90-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு பொறியாளர் சங்க மண்டல செயலாளர் மணிவாசகம் தலைமை வகித்தார்.  மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்டத் தலைவர் பீர் முகமது ஷா, மாநிலச் செயலாளர் வண்ணமுத்து உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.