tamilnadu

நெல்லை அருகே சரணாலயத்தில் இருந்து தண்ணீரை தேடி வெளியே வரும் மான்கள்

திருநெல்வேலி, ஜூன் 8- நெல்லை அருகே கங்கை கொண்டானில் தண்ணீரை தேடி சரணாலயத்தை விட்டு  மான்கள் வெளியே வரு கின்றன. அப்போது வாக னங்களில் சிக்கி உயிரி ழக்கும் அவல நிலை ஏற்படு கிறது. நெல்லை அருகே கங்கை கொண்டானில் சமூக காடு கள் வளர்ப்பு திட்டத்தின் கீழ்  புள்ளிமான் சரணாலயம் உள்ளது. இங்கு அரிய வகை  புள்ளிமான்களும், மிளா க்களும் பராமரிக்கப்படு கின்றன. சுமார் 450 மான்கள்  இருப்பதாக கண்டறியப் பட்டு உள்ளது. 441.16 எக்டேர் பரப்பளவு கொண்ட இந்த மான் பூங்காவை கவனிக்க வனத்துறை, காவலர்களை நியமித்துள்ளது. ஆரம் பத்தில் குடிநீர் வசதி, தீவன வசதியோடு நாலாபுறமும் வேலியிட்டு இப்பூங்கா நன்கு பராமரிக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் பல  இடங்களில் வேலி உடைந்த தால் மான்கள் மெயின் ரோட் டுக்கு வந்து வாகனங்களில் அடிபட்டு இறக்கும் அவல நிலை காணப்படுகிறது.

சில இடங்களில் குறைவான உய ரத்தில் பூங்காவின் வேலி அமைந்துள்ளது. இதனால் குட்டி மான்கள் கூட எளிதில்  வேலி தாண்டி வெளிப்பகு திகளுக்கு மேயச் சென்று  விபத்தில் சிக்கிக் கொள் கின்றன. கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் அமைந் துள்ள பூங்காவில் மான்க ளுக்கு தேவையான தீவ னங்கள் கிடைப்பதில்லை. இங்கு ஏற்கனவே 5 ஏக்கர்  பரப்பில் புல் வளர்க்கப்பட் டது. குடிநீர் தொட்டிகளும் திறக்கப்பட்டன. இருப்பினும் அவை மான்களுக்கு போது மானதாக இல்லை. இதன் காரணமாக மான்கள் அடிக்கடி சரணாலயத்தை விட்டு வெளியே வரு கின்றன.சில மான்கள் அபி ஷேகப்பட்டி வனப்பகுதி வரை செல்கின்றன. நெல்லை -தென்காசி சாலையி லும் மான்கள் விபத்துக்குள் ளாகும் சம்பவங்கள் அதிக மாக நடக்கிறது. சில இடங்க ளில் நாய்களாலும் வேட்டை யாடப்படுகின்றன. புள்ளி மான்கள் வெளியேறுவதை தடுக்க பூங்காவின் மேற்கு எல்லையையொட்டி நெடுஞ் சாலையின் கிழக்கு பகுதியில் ஏற்கனவே 288.40 எக்டேர்  நீண்ட சுவர் கட்டப்பட்டது.

 மற்ற 3 வாயில்களிலும் முள்வேலி அமைக்கப் பட்டது. இந்த தடுப்புகள் ஓர ளவு மான்களின் இறப்பை குறைத்தாலும் இடிந்த சுவர்கள் வழியாகவும், சிதில மடைந்த வேலிகள் வழியா கவும் மான்கள் சாலைக்கு வருவது அதிகரித்து உள்ளது.கடந்த சில தினங்க ளாக தண்ணீரை தேடி வெளி யேறும் மான்களின் எண்ணிக் கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு வெளியே வரும்  மான்கள், ரோட்டில் செல்லும்  வாகனங்கள் மோதி இறக் கின்றன. நாய்கள் கடித்தும் இறக்கின்றன. இதை தடுக்க வனத்துறையினர் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். மான்களை கண்கா ணிக்க அங்கு ஒரு கண்கா ணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதை விரைவுபடுத்தி காவ லர்கள் 24 மணி நேரமும் பணி யில் இருந்து இதை கண்கா ணிக்க வேண்டும். மான்க ளுக்கு தேவையான குடி தண்ணீர், உணவுகளை ஏற்பாடு செய்து கொடுத்து மான்களை பாதுகாக்க வேண்டும் என்று அந்த பகுதி  மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

;