திருநெல்வேலி, ஜூலை 30- நெல்லை மாவட்டத்தில் வியாழக் கிழமை மேலும் 164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,893 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிக ரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணம டைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள் ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத் தில் வியாழக்கிழமை மேலும் 164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 4,893 ஆக உயர்ந்துள்ளது.