tamilnadu

விமானம், கப்பல் மூலம் நெல்லைக்கு 3,640 பேர் வருகை

திருநெல்வேலி, ஜூன் 23- விமானம், கப்பல் மூலம் இதுவரை 3,640  பேர் நெல்லை மாவட்டத்துக்கு வந்துள்ளனர் என நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிர பாகர் தெரிவித்தார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நெல்லை மாவட்ட எல்லை யில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலை கள், மாநில சாலைகள் மற்றும் அனைத்து  சாலைகளிலும் சோதனைச் சாவடிகள் அமை க்கப்பட்டு காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, பொது சுகாதாரம் மற்றும்  மருத்துவ துறைகள் மூலம் காண்காணிக் கப்பட்டு வருகின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் பிற மாநிலத்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து விமானம் மற்றும் கப்பல் மூலம் நெல்லை மாவட்டத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் கொ ரோனா வைரஸ் தொற்று உள்ளதா என பரிசோ தனை செய்யப்படுகிறது. அவர்கள் ஒரு வாரம் கண்காணிக்கப்பட்டு அதன் பின்னர் 2-வது பரி சோதனை செய்யப்படுகிறது. பின்னர் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு அந்தந்த பகுதி தாசில்தார் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த ஜூன் 21 தேதியின் படி வெளி நாட்டில் இருந்து விமானம் மற்றும் கப்பல்  மூலம் இதுவரை 3,640 பயணிகள் நெல்லை  மாவட்டத்துக்கு வந்துள்ளனர். வெளி மாநி லங்களில் இருந்து சுமார் 11,200 பயணிகள் வந்துள்ளனர். மேற்கண்ட அனைவரும் வீடு களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக் கப்பட்டு வருகிறார்கள்.