tamilnadu

தனியார் கல்வி நிறுவனங்களில் 25 சதவீத ஒதுக்கீட்டுக்கு மே இறுதி வரை விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி, ஏப்.21- தனியார் கல்வி நிறுவனங்களில் 25 சதவீத ஒதுக்கீட்டுக்கு நலிவடைந்த பிரிவினர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறி இருப்பதாவது:25 சதவீதம் இடஒதுக்கீடுகுழந்தைகளுக்கான இலவசமற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில்25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கை செய்ய வழி செய்யப்படுகிறது.நெல்லை மாவட்டத்தில் உள்ள 434 தனியார் சுயநிதி பள்ளிகளில் (மெட்ரிக், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி) நுழைவுநிலை (எல்.கே.ஜி.) 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 5,692 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை இணைய வழியில் விண்ணப் பிக்கலாம் இதற்கான வசதி hவவயீ://சவந.வளேஉhடிடிடள.படிஎ.in/வயஅடையேனரஎன்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பெற்றோர் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தேஅதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அலுவலகங்களில் இலவசமாக விண்ணப்பங்களைபதிவேற்றம் செய்யலாம்.மேலும், மாவட்டத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களிலும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். இணைய வழியாக பதிவு செய்வதற்கு பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடத்துக் கான ஆதார சான்று ஆகிய சான்றிதழ்களுடன் குழந்தைகளின் புகைப்படமும் கொண்டு வரவேண்டும்.திங்கட்கிழமைமுதல் அடுத்த மாதம் (மே) வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை ஏழை எளியமக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

;