tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்த 25 பேர்

நெல்லை சேந்திமங்கலத்தில் அந்த ஊரை சேர்ந்த செல்வகணபதி தலைமையில் புதனன்று 25 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், தாலுகா செயலாளர் எம்.சுடலைராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதில்  ஆர்.எஸ்.ஏ.நகர் மணிகண்டன், பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.