tamilnadu

ஒப்பந்த சாகுபடி திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்

தஞ்சாவூர் நவ.30- தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை அன்று விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆட்சி யரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது, “தமிழ்நாடு வேளாண் விளை பொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த சாகுபடி மற்றும் சேவைகள் ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல் சட்டம் 2019 என்கிற சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  அரசு அதிகாரிகள் முன்னிலையில் விவசாயிகள் மற்றும் நிறுவனம் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொள்வார் கள் என குறிப்பிடப்படுகிறது. விலையை தீர்மானிப்ப தில் இருந்து அரசு தன்னை விடுவித்துக் கொள்கிறது. மேலும் கொள்முதல், அரசு மானியம் விவசாயக் கடன் ஆகியவற்றில் இருந்தும் அரசு விடுவித்துக் கொள்ளும் நிலை உள்ளது. இதனால் கம்பெனிகள் தங்களுக்கு தேவையானதை உற்பத்தி செய்ய விவ சாயிகளை வற்புறுத்தும் நிலை உள்ளது. எனவே, தமிழக அரசு இச்சட்டத்தை திரும்பப் பெற மாவட்ட ஆட்சியர் மூலம் வலியுறுத்துகிறோம். 

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம் வட்டங்களில் இந்தப் பருவத்தில் விளைந்துள்ள பூவன் வாழைத்தார் உரிய விலை கிடைக்காமல் விலை வீழ்ச்சி அடைந்து, வாழைத்தார் அறுவடை செய்யாமல் மரங்களிலேயே விட்டு வாழைத்தார் வீணாகி வருகிறது. ஏக்கருக்கு ரூ. 1லட்சம் வரை செலவு செய்து உரிய விலை கிடைக்காமல் விவசாயி கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.  பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, கடந்த ஆண்டு கஜா புயலால் வாழை பெருத்த சேதம் அடைந்த நிலையில், இன்னும் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. அதனை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் கௌரவ நிதி திட்டம் ஓராண்டாக செயல்பட்டு வரும் நிலையில், முன்பே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பலருக்கும் இன்னும் தொகை கிடைக்கவில்லை. அதை உடனடி யாக வழங்க வேண்டும். 

விவசாயிகள் பெயரில்  கடன பெற்று மோசடி

திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகள் பெயரில் மோசடியாக வங்கிக ளில் கடன் பெற்று விவசாயிகளை ஏமாற்றியுள்ளது. விவசாயிகள் வெட்டிய கரும்புக்கு வழங்க வேண்டிய ஆதார விலை மற்றும் ஊக்கத் தொகை யும் வழங்கப்படவில்லை. விவசாயிகள் அளித்த புகாரில் ஆலை நிர்வாகத்தின் மீது மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது. கடன் தீர்ப்பாயத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.  தற்போது விவசாயிகள் பெயரில் வங்கிகளில் கடன் உள்ளதாக (அதாவது ஆலை நிர்வாகம் பெற்ற கடனுக்காக)  கூறி புதிய கடன் எதனையும் விவசாயி கள் பெற முடியாத நிலை உள்ளது. எனவே விவ சாயிகள் பெயரில் உள்ள ஆலை நிர்வாகம் வாங்கிய கடன்களை ஆலையின் பெயருக்கு மாற்றி, விவசாயி களை கடன் பொறுப்பில் இருந்து விடுவிக்க ஆவன செய்ய வேண்டும். 

மாவட்டம் முழுவதும் யூரியா, பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு உள்ளதாக செயற்கையாக பற்றாக் குறையை உருவாக்கி, அதிக விலை மற்றும் வேறு பொருட்கள் வாங்க வியாபாரிகளால் நிர்ப்பந்தம் செய்யப்படுகிறது. அத்துடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பல்வேறு காரணங்களைக் காட்டி உரம் விற்பனை செய்யப்படுவதில்லை.  எனவே விவசாயப் பணிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைக்கவும், அத்துடன் பூச்சிகள் மற்றும் நோய் மருந்துகளில் கூடுதல் விலை விற்காம லும் மற்றும் தவறான மருந்து பயன்பாட்டிற்கு வழி வகுப்பது குறித்தும் உரிய கண்காணிப்பு செய்ய வேளாண் துறைக்கு அறிவுறுத்த வேண்டுகிறோம்” இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

;