tamilnadu

புதுகை மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கத் தேர்தல் ரத்து

புதுக்கோட்டை, ஏப்.5-முறைகேடாக நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்ட மகளிர் தையல்தொழிற் கூட்டுறவு சங்கத் தேர்தலைரத்துசெய்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், அடுத்த மூன்று மாதத்திற்குள் புதிதாக தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்ட மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டுக்கான நிர்வாகக்குழு உறுப்பினர் களுக்கான தேர்தல் கடந்த 2.4.2018அன்று நடைபெறும் என அறிவிக் கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட 17 வேட்புமனுக்களில் இரண்டு மனுக்கள்நிராகரிக்கப்பட்டு 15 வேட்பாளர் களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு தையல் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) மாநில நிர்வாகியாக உள்ள சி.மாரிக்கண்ணு பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், கடந்த 28.03.2018 அன்று ஆளுங்கட்சியைச் சேர்ந்த 7 பேர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாகப் போட்டியின்றி வெற்றிபெற்றதாகக் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தன்னிச்சையாக அறிவிப்பு வெளியிட்டனர்.சட்டவிரோதமாக நடைபெற்ற இந்த தேர்தல் செல்லாது என தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின்தேர்தல் ஆணையத்தில் மாரிக் கண்ணு வழகுத் தொடர்ந்தார். இந்தவழக்கை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயசூர்யா தலைமையிலான கிழக்கு மண்டல தேர்தல் விசாரணை அமர்வு விசாரித்து வந்தது. வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கிய இந்த அமர்வு சட்டவிரோதமாக நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்ட மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கத் தேர்தல் செல்லாது எனஅறிவித்தது. மேலும், அடுத்தமூன்று மாதத்திற்குள் தேர்தலைநடத்தி முடிக்கவும் உத்தரவிட் டுள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மாரிக்கண்ணு, ஆளுங் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிகாரிகளுக்கு இந்த தீர்ப்பு சரியான பாடத்தைத் தந்துள்ளது. இனிமேல் நடைபெற உள்ள தேர்தலையாவது நேர்மையாக நடத்துவதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டுமெனக் கூறினார்.

;