tamilnadu

img

பேராவூரணியில் பெண்கள் கூட்டமைப்பு கூட்டம்

தஞ்சாவூர், மே 9-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஐடிஎப்சி பர்ஸ்ட் பாரத் பெண்கள் கூட்டமைப்புகூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்சிசிஎஸ்ஆர் துறை தலைமை அலுவலக திட்டமேலாளர் ஜி.சந்திரசேகர் தலைமை வகித்துபேசினார். கிளை மேலாளர் சி.சன்னப்பன் வரவேற்றார்.தமிழ்ப் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் நா.வெங்கடேசன், வழக்கறிஞர் கா.உத்தமகுமரன், தீயணைப்பு நிலைய அலுவலர் சி.கோவிந்தராசு ஆகியோர் பேசினர். எலும்பு முறிவு சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர் து.நீலகண்டன் கூறுகையில், ஆண்களுக்கு நிகராக கூலி பெறுவதற்கே பெண்கள் போராட வேண்டி உள்ளது. கல்வி போலவே, இன் றைக்கு மருத்துவத் துறையும் வணிக மயமாகிவிட்டது என்றார். பட்டுக்கோட்டை பகுதி மேலாளர் ஜே.ஆர்.ஆதவன், திருச்சி மண்டல சிஎஸ்ஆர் மேலாளர் பி.சந்துரு, மையத் தலைவி பானுமதி ஆகியோர் பேசினார். கிளை துணை மேலாளர் கே.மணிகண்டன் நன்றி கூறினார். நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் 10, 12 ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

;