tamilnadu

img

சிஐடியு கொடிப் பயணத்திற்கு திருச்சியில் வரவேற்பு

திருச்சிராப்பள்ளி, செப்.18- சிஐடியு தமிழ் மாநில 13-வது மாநாடு காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 19-ம் தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஏற்றப்பட உள்ள செங்கொடி தூத்துக்குடியில் இருந்து சிஐடியு மாநில நிர்வாகிகள் எஸ்.எஸ்.சுப்ரமணியன், ஆர்.ரசல், ஆர்.மோகன், ஆர்.எஸ்.செண்பகம், கே.தங்கமோகன் ஆகியோர் தலைமையில் புறப்பட்ட கொடிப் பயணம் செவ்வாயன்று மாலை திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை வந்தடைந்தது. இந்த கொடிப் பயணத்திற்கு சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் வாணவேடிக்கையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் ராமர் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டப் பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் ஜெயபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் செல்வி, மணிமாறன், ஜெயராமன், எஸ்.கே.செல்வராஜ், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் குணசேகரன், டிஆர்இயு நிர்வாகிகள் கரிகாலன், கண்ணன், சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.