tamilnadu

கோரையாற்று பாலத்தை உறுதியாக அமைக்கக் கோரி காத்திருப்பு போராட்டம்

பேச்சுவார்த்தையில் தீர்வு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 31- திருச்சி மாநகராட்சி அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட பஞ்சப்பூர் செட்டி யப்பட்டி அருகே கோரையாற்றின் மேல் அமைக்கப்படும் பாலங்கள் அகலமாகவும், உயரமாகவும், உறுதியாகவும் அமைக்க வேண்டும். மேலும் பஞ்சப்பூர் நெடுஞ்சா லையில் வடிகால் வசதி செய்ய வலியு றுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அபிஷேகபுரம் பகுதிக்குழு சார்பில் பொன்ன நகரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவல கம் முன்பு காத்திருப்பு போராட்டம் அறிவிக்க ப்பட்டது. இதைதொடர்ந்து மேற்கு வட்டாட்சியர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், சிபிஎம் அபிஷேகபுரம் இடைகமிட்டி செயலாளர் வேலுச்சாமி, வருவாய் அலு வலர், கிராமநிர்வாக அலுவலர், தேசிய நெடு ஞ்சாலை மேலாளர் உள்பட அதிகாரிகள் உள்பட சிபிஎம் கட்சியினர் கலந்து கொண்ட னர். பேச்சுவார்த்தையில், திருச்சி முதல் புது க்கோட்டை, மதுரை இணைப்பு நெடுஞ்சா லையையொட்டி பஞ்சப்பூர் செட்டியப்பட்டி அருகே கோரையாற்றின் மேல் கட்டப்படும் பாலம் 70மீ அகலத்திலும் மற்றும் 4.5 மீட்டர்  உயரத்தில் கட்டப்படும். பஞ்சப்பூர் நெடுஞ்சா லையில் வடிகால் வசதி 3 இடங்களில் ஏற்ப டுத்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை மேலா ளரால் தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

;