tamilnadu

img

விவசாய கிணறுகளில் இருந்து சட்ட விரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரிகள்

கரூர், ஜூலை 11- கரூர் மாவட்டம் வேட்டமங்க லம் ஊராட்சி நொய்யல், அத்திப் பாளையம், சேமங்கி, செட்டி தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகு திகளில் ஏராளமான விவசாய தோட் டங்கள் உள்ளன. இந்த தோட் டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து நாள்தோறும் 500 க்கும் மேற்பட்ட லாரிகளில் சுமார் 1 கோடி லிட்டர் அளவில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, வியாபார நோக்கத்தில் கரூர் நகர் பகுதி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், சாயப்பட்டறைகள், கிரசர்கள் போன்றவற்றிற்கு விற்பனை செய் யப்படுவதாக கூறப்படுகிறது.  இவ்வாறு நாள் தோறும் தண் ணீர் எடுத்து விற்பனை செய்யப்படு வதால் சேமங்கி உள்ளிட்ட பகுதி களில் உள்ள கிணறுகள், ஆழ் துளைக் குழாய் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற் படுவதாகவும், இந்த லாரி தண்ணீர் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி கிராம மக் கள் ஏற்கனவே கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனுவும் வழங்கினர்.    மேலும் இது தொடர்பாக புக ழூர் வட்டாட்சியர் ராஜசேகரன், கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய லட்சுமி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், இதனைக் கண்டித்து நொய்யல் குறுக்குச் சாலையில் கரூர்- ஈரோடு பரமத்தி வேலூர் செல்லும் மூன்று வழிச்சாலை பிரிவில் வேட்டமங்க லம் ஊராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த புகழூர் வட்டாட்சியர்(பொ) மகுடீஸ்வரன், துணை வட்டாட்சியர் தனசேகரன், கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் மறிய லில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் வேட்டமங்கலம் ஊராட்சிப் பகுதி களில் உள்ள ஊர்களுக்கு தினமும் தங்கு தடையின்றி காவிரிக் குடிநீர் வழங்க வேண்டும். நொய்யல், அத்திப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து நவீன இயந்தி ரங்கள் மூலம் சட்ட விரோதமாக தண்ணீர் எடுத்துச் செல்லும் டேங்கர் லாரிகளை பறிமுதல் செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் வலியுறுத்தினர். இதில் அதிகாரிகளின் உறுதி மொழியை தொடர்ந்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.