tamilnadu

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மோசடி:   தேர்வர்களின் பணி நியமனத்தை  நிறுத்தி வைக்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜன.28- திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகாடமியில் திங்களன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குனர் விஜயாலயன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது, செப்டம்பர் மாதம் இளநிலை உதவி யாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட 6491 பணியிடங்கள் என முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் 3000 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு நடைபெற்ற ஒருங்கி ணைந்த அரசுப் பணியாளர்கள் தேர்வு- 4 முடிவுகளின்படி, முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேர் மீது வாழ்நாள் தடை விதிக்கப் பட்டதை மகிழ்வுடன் வரவேற்கிறோம். இதன் மூலம் ஆணையத்தின் வெளிப்படைத் தன்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆணையம் மீதான தேர்வர்களின் நம்பகத் தன்மை அதிகரித்துள்ளது. மேலும் குற்றச்செயலில் பலர் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது. அரசு வேலையை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியி ருக்கும் இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய  அரசுப் பணி யாளர் தேர்வாணையம் இதுபோன்ற நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களுக்கு எள்ளளவேனும் இடமளிக்கக் கூடாதென்றும் கேட்டுக் கொள்கின்றோம். மேலும் இதில் பாதிக்கப்பட்ட தேர்வர்களின் சார்பாக, எங்களின் கோரிக்கையாக, இந்த வழக்கு தொடர்பான விசாரணை முழுவதுமாக முடிந்து அறிக்கை வெளியிடும் வரை யில் தேர்வர்களுக்கான கலந்தாய்வு மற்றும் பணி நியமன ஆணை ஆகியவற்றை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.  அனைத்து முதல்நிலைத் தேர்வையும் இணையவழி (ஆன்லைன்) மூலம் நடத்த வேண்டும். இக்கோரிக்கைகளுக்கு மாணவர்களும் ஆதரவு தெரிவித்தனர் என்றார்.

;