tamilnadu

திருநெல்வேலி ,நாகர்கோவில் ,திருநெல்வேலி மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

நெல்லை கூட்டுறவு பேரங்காடி தேர்தல்: 44 மனுக்கள் ஏற்பு

திருநெல்வேலி, ஜூன் 9- நெல்லையில் உள்ள கூட்டுறவு பேரங்காடியில் இயக்கு நர்கள் தேர்தலையொட்டி நடைபெற்ற வேட்புமனு பரி சீலனையின்போது 44 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. கூட்டுறவு பேரங்காடி இயக்குநர் தேர்தல் வரும் 14 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்பு மனுதாக்கல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 46 வேட்புமனுக்களில் ராம லட்சுமி, பாலமுருகன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் தள்ளு படி செய்யப்பட்டன. மீதம் உள்ள 44 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.  அதிமுக சார்பில் பல்லிக்கோட்டை செல்லத்துரை, ரோஸ்மேரி, ரவி ஆறுமுகம் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அமமுக சார்பில் ராஜை மாயா ண்டி, ஆறுமுகம், அரசன் ராஜேந்திரன் உள்ளிட்டோர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் வாபஸ் பெற 10 ஆம் தேதி கடைசி நாளாகும்.

காலமானார்

நாகர்கோவில், ஜுன் 9- கன்னியாகுமரி் மாவட்ட தீக்கதிர் செய்தியாளர் ஜீன்பாலின் தந்தை எஸ்.அம்புரோஸ் (60) ஞாயிறன்று புதுக்கடை அருகில் உள்ள கைத்துண்டியில் காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சிகள் திங்களன்று காலை 10 மணி யளவில் புதுக்கடையில் நடைபெறுகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அம்புரோசுக்கு ரோணிக்கம் என்கிற மனைவியும், ஜீன்பால் உட்பட 5 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அம்புரோஸ் இருசக்கர வாகன பழுதுநீக்கும் பணி செய்துவந்தார். அன்னாரது மறைவுச் செய்தி அறிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி உள் ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தீக்க திர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

பாளை. சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை

திருநெல்வேலி, ஜூன் 9- பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இது தொடர்பாக நெல்லை நகர்ப்புற செயற்பொறி யாளர் (விநியோகம்) சு.முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது- பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடை பெறவுள்ளது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், ரஹ்மத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்தி நகர், சமா தானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளை யங்கோட்டை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, திரு வனந்தபுரம் சாலை, முருகன்குறிச்சி, கிருஷ்ணாபுரம், அரியகுளம், மேலக்குளம், சென்னல்பட்டி, நடுவக்குறிச்சி, வல்லநாடு, செய்துங்கநல்லூர் ஆகிய இடங்களில் மின் விநி யோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

தரமற்ற உளுந்து விதைகளை அரசு விநியோகித்து விட்டு விவசாயிகளை குறை கூறுவதா?

விவசாயிகள் சங்கம் கண்டனம் 
 

தஞ்சாவூர், ஜூன் 9- தஞ்சாவூர் மாவட்டத்தில் தரமற்ற உளுந்து விதைகளை விவ சாயிகளுக்கு விநியோகித்து விட்டு, தற்போது தங்கள் குறைகளை மறைக்க, விவசாயிகள் மீது குறை கூறுவதா என வேளாண் துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. மேலும் தவறிழைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தி உள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பி னர் பட்டுக்கோட்டை எம்.செல்வம் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடந்தாண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா  புயலில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு பகுதியில் உள்ள தென்னை விவசாயிகள் 100 சதம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாகி நிற்கின்றனர்.  இந்நிலையில் தென்னை விவசாயிகளுக்கு அரசு வழங்கிய நிவாரணம் என்பது யானைப் பசிக்கு சோளப்பொறி என்பது போல் உள்ளது. குறிப்பாக வேளாண் துறை அதிகாரிகளின் குளறுபடியால் இதுவரை நிவாரணம் கிடைக்காமல் பல விவசாயிகள் சிரமமான சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். தென்னை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 35 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இதுவரை கிடைக்காத நிலை உள்ளது. இந்நிலை யில் தென்னை விவசாயிகளுக்கு அவர்கள் கேட்காத நிலையில் அவர்களுக்கு கோ5 நரக உளுந்து விதையை வேளாண்துறை வழங்கி யது இதனை பயிரிட்ட விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள னர். செடிகள் முளைத்தும் பூக்கவோ, காய்க்கவோ இல்லை.  இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சி யருக்கு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 75 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பப் பட்டது.

இது குறித்து செய்தித்தாள்களில் செய்தி வெளியானது. இதன் பிறகு வேளாண் துறை உயர் அலுவலர் ஜஸ்டின் தலைமையில், பட்டுக்கோட்டை கரம்பயம் பகுதியில் உளுந்து பயிரிட்ட விவசாயி களை சந்தித்தும், பாதிக்கப்பட்ட உளுந்து செடிகளை பார்வை யிட்டும் மாவட்ட ஆட்சியருக்கு, வேளாண் துறையினர்அறிக்கை அளித்துள்ளனர்.  இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உளுந்து பயிரிட்ட விவசாயிகள் முறையாக பயிர் பாது காப்பு செய்யவில்லை என்றும், மஞ்சள் நோய் தாக்குதலைக் கட்டுப் படுத்தவில்லை’ எனவும் தெரிவித்துள்ளார். இதனை ஏற்க இயலாது. இது விவசாயிகளை குறை கூறி வேளாண் துறை அதிகாரிகளை பாது காக்கும் முயற்சி என்பது போல் தெரியவருகிறது. வேளாண்மை துறை மூலம் புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் ரூ 40, 50 என மிகக் குறைந்த விலையில் தரமில்லாத விதைகளை வாங்கி விவசாயி களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.  பட்டுக்கோட்டை பிளாக்கில் மட்டும் 140 டன் உளுந்து 700 ஹெக்டே ருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் மதுக்கூர், சேது பாவாசத்திரம், பேராவூரணி, திருவோணம், ஒரத்தநாடு ஆகிய பகுதி களிலும் விவசாயிகளுக்கு உளுந்து வழங்கப்பட்டு உள்ளது. கஜா புயலை காரணம் காட்டி, தென்னை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்குவதாகக் கூறி, தரமில்லாத உளுந்து வகைகளை கொள்முதல் செய்ததில் பல லட்சக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தெரியவருகிறது.  எனவே மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு, உரிய விசாரணை நடத்தி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண்துறை அதிகாரிகள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 75 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். அரசு உரிய இழப்பீடு வழங்காவிட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி ஜூன் 20ஆம் தேதி வேளாண் துறை அலுவலகம் முன்பு மனு கொடுத்து  ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்”. இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

;