tamilnadu

தூத்துக்குடி மற்றும் தேனி முக்கிய செய்திகள்

மெக்கானிக்கை தாக்கி செல்போன், பைக்  பறிப்பு

தூத்துக்குடி, ஜூன் 18- தூத்துக்குடியில் மெக்கா னிக்கை தாக்கி செல்போன், பைக்கை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி செல்சினி காலனியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ஐயம் பெருமாள் (45). இவர் தாமோ தர நகரில் ஒர்க்சாப் நடத்தி வருகிறார். செவ்வாயன்று அதிகாலை 2.30 மணியள வில் வேலை முடிந்து தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். பீங்கான் ஆபீஸ் அருகே சென்ற போது ஒருவர் பைக்கில் லிப்ட் கேட்டு சிஜிஇ காலனி யில் இறக்கிவிடுமாறு கூறி யுள்ளார். இதையடுத்து அவர் அந்த நபரை பைக்கில் ஏற்றிச் சென்றுள்ளார். சிஜிஇ காலனியில் அவரை இறக்கிவிட்டபோது, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த 3பேரும், பைக்கில் உடன் வந்த நபரும் சேர்ந்து ஐயம்பெரு மாளை தாக்கி அவரது மோட்டார் பைக், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.  இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து 4பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

குழந்தை உரிமை மீறல் தொடர்பாக ஜூன் 21-ல் புகார் தெரிவிக்கலாம்

தேனி, ஜூன் 18- தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், குழந்தை கள் உரிமை மீறல் செயல் கள் குறித்து புகார் தெரி விக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல் தேவ் தெரிவித்துள்ளார். இராமநாதபுரத்தில் தேசிய குழந்தைகள் உரி மைகள் ஆணையம் சார்பில் ஜூன் 21-ம் தேதி காலை 10 மணிக்கு குழந் தைகள் உரிமை மீறல் குறித்த சிறப்பு முகாம்  நடைபெறுகிறது.   இம்முகாமில் தேனி மாவட்டத்தில் பள்ளி செல் லும் மற்றும் விடுதியில் தங்கிப் படிக்கும் குழந்தை கள் மீதான உரிமை மீறல் கள், குழந்தை தொழிலா ளர் முறை, ஒதுக்கப்பட்ட குழந்தைகள், எச்.ஐ.வி. யால் பாதிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட குழந்தை கள், முறையற்ற தத்து, குழந்தை விற்பனை, போதை பழக்கத்திற்கு அடிமையான குழந்தை கள், காணாமல்  போன குழந்தைகள் ஆகியவை குறித்து பொதுமக்கள் நேரில் சென்றும், ‌www. ebaaindian.nic.in என்ற இணையதள முகவரியிலும் புகார் மனு அளிக்கலாம்.

;