tamilnadu

தேனி முக்கிய செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்குஆயுள் தேனி மகிளா நீதிமன்றம் அதிரடி

தேனி, டிச.26- பெரியகுளத்தில் சிறுமியை பாலியல்பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு தேனி நீதிமன்றம் ஆயுள்தண் டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பெரியகுளம் கீழவடகரைப்பகுதியைச் சேர்ந்த காமாட்சி மகன் நாகராஜ்(24). 2018 அக்டோபர் 25ம் தேதி இவர் வீட்டிற்கு அருகில் உள்ள 5வயது சிறுமியை பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதுடன் கொலை செய்யவும் முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் கேட்டு ஓடி வந்த உறவி னர்கள் ,அவரது பெற்றோர் நாகராஜனை பிடித்து பெரிய குளம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பெரியகுளம் காவல்துறையினர் போக்சோ, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் நாகராஜை கைது செய்தனர். இது குறித்த வழக்கு தேனிமகிளா நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. வியாழனன்று விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி கீதா, குற்றவாளி நாகராஜிற்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

கள்ள நோட்டுக்கள் வழக்கில் மேலும் ஒருவர் கைது

தேனி, டிச.26- போடியில் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விடுவதாக வந்த தகவலையடுத்து கியூ பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டு வந்தனர். அப்போது கேரளத்தில் தயாரிக்கப்பட்டு போடி, தேவா ரம், கோம்பை உள்ளிட்ட ஊர்களில் சிலர் 500ருபாய் கள்ள நோட்டுக் களை புழக்கத்தில் விட்டு வருவதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து போடி நகர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போடி நகர் காவல் நிலைய போலீஸார் போடி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகில் உள்ள புஷ்ப கண்டம் என்ற ஊரைச் சேர்ந்த சுரேந்திரன் மகன் டாய்ஜோ (21) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரிடம் விசா ரித்த தகவலின் அடிப்படையில் மேலும் சிலரை தேடி வந்தனர். இந்நிலையில் புதன் கிழமை இரவு போடி பகுதியில் சுற்றித் திரிந்த தேனி மாவட்டம் கோம்பை, மதுரை வீரன் தெருவில் வசிக்கும் சண்முகராஜா (28) என்பவரை பிடித்து விசாரித்தபோது அவரிடம் ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸார் நீதி்மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

;