tamilnadu

img

மணல் மாட்டு வண்டி ரீச் திறக்கக் கோரி காத்திருப்புப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.9-திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி சங்க மாவட்ட தலைவர் ஜி.ராமர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நீண்ட காலமாக காவிரி மற்றும்கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் மணல்எடுத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் தாலுகா மாதவபெருமாள் பஞ்சாயத்தில் கடந்த 4 மாதங்களாக செயல் பட்டு வந்த மணல் மாட்டு வண்டி ரீச்கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதிமூடப்பட்டது. இதனால் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே திருச்சி மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப்பகுதிகளில் மணல் மாட்டுவண்டி ரீச் திறக்கக் கோரி கடந்த பிப்ரவரிமாதம் 22 ஆம் தேதி திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் மார்ச் 4 ஆம் தேதி லால் குடி தாலுகா அரியூர், திருவெறும்பூர் தாலுகா கீழமுல்லைக்குடி ஆகிய இடங்களில் மணல் மாட்டு வண்டி ரீச் திறப்பது. 20 நாட்களுக்குள் கொண்டையம்பேட்டை, முருங்கப்பேட்டை, பெட்டவாய்த்தலை ஆகிய இடங்களில் மணல்ரீச் திறப்பது என முடிவானது. ஆனால்இதுநாள்வரை மணல் ரீச் திறக்கப்படவில்லை. எனவே பேச்சுவார்த்தையின் படி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுபகுதிகளில் மணல் ரீச் திறக்க வலியுறுத்தி திங்களன்று திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள பொதுப்பணித் துறை தலைமை அலுவலக வளாகத்தில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.


போராட்டத்திற்கு மணல் மாட்டு வண்டி சங்க தலைவர் ராமர் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, சிஐடியுமாநாகர் மாவட்ட தலைவர் ரெங்கராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத், புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் மணல் மாட்டு வண்டிசங்க நிர்வாகிகள் சேகர், மணிகண்டன்,மோகன், மாணிக்கம், ரமேஷ், ஜான்ரவி,அந்தோணி, பாலு, ஆனந்தராஜ், கண்ணதாசன், ரெங்கசாமி, கிருஷ்ணமூர்த்தி, சமயபுரம் மதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தகவலறிந்து அங்கு வந்த உதவி பொறியாளர் பேச்சுவார்த்தை நடத்தி வரும் மார்ச் 8 ஆம் தேதிக்குள் மணல் மாட்டு வண்டி ரீச் திறக்கப்படும் எனவாக்குறுதியளித்தார். இதனை தொடர்ந்து காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.

;