திருச்சியில் 32 ஆயிரம் மாணவர் எழுதுகின்றனர் திருச்சிராப்பள்ளி, மார்ச் 1- தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர் களுக்கு பொதுத்தேர்வு திங்கட்கிழமை (இன்று) தொடங்குகிறது. இதில் திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 250 பள்ளிகளை சேர்ந்த 14,482 மாண வர்கள், 17,023 மாணவிகளும் என மொத் தம் 32,305 பேர் எழுத உள்ளனர். மொத்தம் 122 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. முதல் நாள் மொழிப்பாட தாள் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெறும். பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 24-ந் தேதி முடிவடைகிறது. பிளஸ்-1 பொதுத் தேர்வு வருகிற 4-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடைபெறும் என அதிகாரி கள் தெரிவித்தனர்.