மார்க்சிஸ்ட் கட்சியினர், நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் மக்களிடம் கட்சி நிதி வசூல் செய்யும் இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீடு வீடாக சென்று பிரச்சனைகளை கேட்டு வருகின்ற மார்க்சிஸ்ட் கட்சியினரை மக்கள் ஆர்வமுடன் வரவேற்கின்றனர். இலுப்பூர், சங்கரன்பந்தல், நெடுவாசல், கூடலூர் பகுதிகளில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் டி.இராசையன் தலைமையிலும், ஆயப்பாடி, பெரியகூத்தூர், பூதனூர், எடுத்துக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் காபிரியேல் தலைமையிலும், கொத்தங்குடி, பனங்குடி, நீலவெளி உள்ளிட்ட பகுதிகளில் வட்டக்குழு உறுப்பினர் எஸ்.பஷீர் அகமது, கிளை செயலாளர் என்.சந்திரமோகன் ஆகியோர் தலைமையிலும் நிதி வசூல் பணியில் ஈடுபட்டனர்.