tamilnadu

திருச்சியில் முதன் முறையாக  நவீன முறையில் மூதாட்டிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சாதனை  

 

திருச்சிராப்பள்ளி, ஜன.19- திருச்சி மேக்ஸ்கேர் மருத்துவமனை இயக்குனரும், எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான முகேஷ்மோகன், திருச்சியில் முதன் முதலாக ரோபோடிக் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி ஆஸ்டியோ ஆர்த்ரை டிஸ் (மூட்டு தேய்மானம்) நோயால் அவதியுற்ற 63 வயது பெண்மணிக்கு நவீன நேவியோ ரோபோடிக்ஸ் நுட்பத்தின் பயன்படுத்தி சிறந்த முறையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை யினை வெற்றிகரமாக செய்து முடித்தார்.  இதுகுறித்து எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் முகேஷ்மோகன் நிருபர்களிடம் கூறுகை யில், ரோபோடிக்ஸ் துணை கொண்டு அறுவை சிகிச்சையினை மேற்கொள்ளும் பொழுது உயர்தர கணினி தொழில் நுட்பத்து டன் கூடிய அமைப்பாக செயல்பட்டு அறுவை சிகிச்சை நிபு ணருக்கு மூட்டுகளின் அளவினை துல்லியமாக கணித்து சிகிச்சையினை மேற்கொள்ள உதவுகிறது,  அத்துடன் மூட்டுகளின் மேற்புற எலும்புகள் தேவை யற்ற அளவிற்கு மேலாக அகற்றப்படுவதை தடுக்கும் வழி முறையை உறுதி செய்கிறது. (பாதிக்கப்பட்ட எலும்புகள் மில்லி மீட்டர் அளவில் மட்டுமே நீக்கப்படுகிறது) இதன் மூலம் இயற்கையான மூட்டுகள் இணைக்கப்பட்டது போன்ற நிலை யை உருவாக்குகிறது. இந்த அறுவை சிகிச்சையின் போது, மிகக்குறைந்த அள விலான இரத்த சேதம், தொடை தசைகளை சேதமாக்காமல் இருப்பது, மிகச் சரியான சீரமைப்பு, அறுவை சிகிச்சைக்கு பின் குறைவான வலி ஆகிய பயன்களின் மூலம், நோயாளி மிகக்குறைந்த நாட்களிலேயே வீட்டிற்கு செல்ல முடிகிறது. இதன் மூலம் நோயாளி நேரான நடையும், சீரான வேகம் விரைவில் பெற முடியும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் முன் போன்று விரைந்து இயல்பாகவும் சுறு சுறுப்பாகவும் செயல்பட முடியும். இதன் மூலம் வய தானவர்கள் கூட இளவயதினருக்கு சமமாக தங்கள் செயல் களை தாங்களே மேற்கொள்ள உதவுகிறது. நோவியோ ரோபோடிக்ஸ் நுட்பத்தின் மூலம் சிகிச்சை பெற்ற ஷ ராணி (65) தனது இரு கால் மூட்டுகளும் அறுவை சிகிச்சை பெற்ற 4 நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி யுள்ளார். மேலும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர், அவர் மிக ஊக்கத்துடன் இயல்பாகவும் நடக்கின்றார். ரோபோடிக்ஸ் துணை கொண்டு மேற்கொள்ளும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஆர்தரைடிஸ் நோயாளிக்கு கிடைக்கும் மிக நவீன சிகிச்சையாகும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் திருச்சி மேக்ஸ் கேர் மருத்துவமனை தனித்தன்மையுடன் செயல்பட்டு சாதனை படைத்து வரு கிறது. இந்த தொழில் நுட்பம் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நாடுகளில் ஆராய்ச்சியின் மூலம் உருவாக்கப்பட்டதாகும். தலைநகருக்கு அடுத்தப்படியாக நேவியோ ரோபோடிக்ஸ் சிகிச்சை முறையை தமிழ்நாட்டில் மேக்ஸ்கேர் மருத்துவ மனை அறிமுகப்படுத்தி உள்ளது என்றார். இந்த தொழில் நுட்பத்தை முறையாக பொது மக்களுக்கு விளக்கும் நிகழ்ச்சி யை திருச்சி கலையரங்கத்தில், மறைந்த இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் ஆலோசகர் பொன்ராஜ் ஞாயிறு அன்று தொடங்கி வைத்தார்.  விழாவில் உலக மருத்துவ சங்கத்தின் பொருளாளர் டாக்டர் ரவீந்திர வாங்கேட்கர், இந்திய மருத்துவ அகாடமி சேர்மேன் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரோபோடிக்ஸ் சிகிச்சை முறையை பற்றிய சிறப்புகளை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபு ணர் டாக்டர் சூரிய நாராயணன் விளக்கவுரையாற்றினார். விழா வில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பயன டைந்தனர்.

;