tamilnadu

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் முக்கிய செய்திகள்

வாலிபர் தற்கொலை

கும்பகோணம், ஜூன் 26- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பாலக்கரையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் செல்வகுமார்(35). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் உள்ளது. குடும்ப பிரச்சனை காரண மாக செல்வகுமார் மனம் உடைந்து இருந்துள்ளார். இந்நிலையில் கும்பகோணம் ரயில்வே நிலையம் அருகே செல்வகுமார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

மாணவர்கள் 3 பேர் மாயம்

கும்பகோணம், ஜூன் 26- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திரு விடைமருதூர் அருகே உள்ள பவுண்டரீகபுரம் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் மனோஜ் (13) ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது மற்றொரு மகன் மகேந்திரன்(8). இவர் மூன்றாம் வகுப்பு படித்து வரு கிறார். அதே பகுதியைச் சேர்ந்த முருகனின் மகன் ஜெக தீஸ்வரன்(11). இவர் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் மூவரையும் கடந்த ஜூன் 21-ம் தேதி முதல் காணவில்லை. அவர்களது உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் திருநீலக்குடி காவல்துறை யிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மெக்கானிக் கடையில் தீ விபத்து

கும்பகோணம், ஜூன் 26- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் லால்பகதூர் நகர் சாலை சாக்கோட்டையை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் அவ ரது சகோதரர்கள் வாட்டர் சர்வீஸ் கடை, லாரி மெக்கானிக் கடை, மெக்கானிக் கடை ஆகிய மூன்று கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இரவு எப்போதும் போல் கடையை மூடி விட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டனர். காலை 6 மணி அள வில் மூன்று கடைகள் எரிந்து நாசமாகிக் கிடந்தன. கடையிலி ருந்து ஒரு லாரி, ஒரு சிறிய வேன் உள்ளிட்டவை தீயில் எரிந்தன. காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு 2 தீயணைப்பு வாகனங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

சட்டம்-ஒழுங்கு, சாலை  பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூர், ஜூன் 26 - தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திரம் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில், ஒரத்தநாடு வட்டம், தஞ்சாவூர் வட்டம், பூத லூர் வட்டம் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி ஆகிய பகுதி களில் சட்டம் ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் அச்சம்பவங்கள் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியரால், அலுவலர்களுக்கு அறிவுரை வழங் கப்பட்டது.  மேலும் சாலை பாதுகாப்பு குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சாலை நடுத் திட்டுகள், வேகத் தடைகள், அடையாள ஒளி விளக்குகள், ரவுண்டானா, எச்சரிக்கை பலகைகள், பிரதி பலிப்பான்கள் ஆகியவை அமைக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் வருவாய் துறை, காவல் துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர். 

இன்று எரிவாயு குறைதீர் கூட்டம்  

தஞ்சாவூர், ஜூன் 26- தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் ஜூன் 27 (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.  இதுகுறித்து ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தஞ்சாவூர் வட்டத்திலுள்ள எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்தி வேல் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, தஞ்சை வட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்கள், தங்களது குறைகளை நேரிலும், மனு வாகவும் அளித்து தீர்வு காணலாம்’ என தெரிவித்துள்ளார்.

இன்று மாற்றுத்திறனாளிகள்  சிறப்பு குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், ஜூன் 26- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 27 (வியாழக்கிழமை) பகல் 12 மணியளவில் நடை பெற உள்ளது.  ‘தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று, தகுதியான மனுக்க ளுக்கு தீர்வு காணும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அரங்கில் (எண்.10) வியாழக்கிழமை(ஜூன் 27) பகல் 12 மணியள வில் சிறப்பு குறை தீர் கூட்டம் நடைபெற உள்ளது.  இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம். மாற்றுத்திற னாளிகளின் மனுக்களில் உள்ள கோரிக்கைகளுக்கு ஏற்ப, உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் தொடர்புடைய துறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும்.  மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலகம், அறை எண்-14, தரைத்தளம், மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகம், தஞ்சாவூர்-10 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது 04362- 236791 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்’ என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

குறைதீர் கூட்டம்

 திருவாரூர், ஜூன் 26- திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

;