அறந்தாங்கி: புதுக் கோட்டை மாவட்டம் அறந் தாங்கியில் நகரத் துணைச் செயலாளர் பார்த்திபன் தலை மையில் 7வது வார்டில் உள்ள 850 குடும்பங்களுக்கு, 4வது வார்டில் ராமசாமி தலைமை யில் 500 குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள் வீடு வீடாகச் சென்று வழங்கப் பட்டது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வருமா னம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மண்டலமுத்து, ராமசாமி, மாறன், பாலகிருஷ்ணன், முருகன், மகளிர் அணி ரமா, ராணி, பூமணி உள்ளிட்டோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.