tamilnadu

img

அரசுப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கல்

புதுக்கோட்டை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எல்ஐசி பெண் ஊழியர்கள் சார்பில் புதுக்கோட்டை நகராட்சி நடுனிலைப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமையன்று ரூ.10 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை வகித்தார். காப்பீட்டு ஊழியர் சங்க தஞ்சை கோட்டத் துணைத்தலைவர் என்.கண்ணம்மாள் சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்குத் தேவையான சேர், வட்ட மேசை உள்ளிட்ட ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கிளை மேலாளர் ஆர்.அருள், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க கிளைத் தலைவர் வி.லதாராணி, செயலாளர் வீர.துரைசிங்கம், நிர்வாக அதிகாரி ஹில்டாபிலோமினா, சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;