tamilnadu

திருச்சியில் பல இடங்களில் வாக்குப் பதிவு எந்திரங்கள் திடீர் பழுது

திருச்சிராப்பள்ளி, ஏப்.18-திருச்சியில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்ததால் மக்கள் பல மணி நேரம் காத்திருந்து வாக்களித்தனர். தமிழகம் முழுவதும் வியாழனன்று வாக்கு பதிவு நடைபெற்றது. இதில்திருச்சி மாநகர் பகுதியின் பல்வேறுஇடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுதடைந்தன. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தீரன் நகரில் உள்ள காமாட்சியம்மன் ஆரம்பப் பள்ளி வாக்குச்சாவடி எந்திரம் திடீரென பழுதானது. வாக்கு பதிவு எந்திர பட்டனை அழுத்தினால் அதன் விளக்கு எரியவில்லை. வாக்கு பதிவு செய்ய இரண்டு பேர் விரலில் மை வைத்த நிலையில் வாக்கு பதிவுசெய்ய முடியாமல் ஒரு மணி நேரத் திற்கு மேல் மக்கள் காத்திருந்தனர். இதில்சிலர் திரும்பி சென்றனர். சுமார் ஒன்றரைமணி நேரத்திற்கு மேல் ஆகியும் வாக்கு பதிவு எந்திரம் சரி செய்யப்படாததால் கட்சிகளின் ஏஜென்ட்கள் கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் 10.30 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. சுமார் இரண்டரை மணி நேரம் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதே போன்று 43-வது வார்டு வாக்குச் சாவடியிலும் வாக்கு பதிவு எந்திரம் பழுதானது. இதுகுறித்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் தெரிவித்தும் நீண்ட நேரத்திற்கு பிறகே சரிசெய்யப்பட்டது.


தேர்தல் அலுவலருக்கு திடீர் மாரடைப்பு


திருவானைக்காவல் அகிலாண் டேஸ்வரி பள்ளி வாக்குச்சாவடி அலுவலராக, முசிறி அரசு பள்ளி கிளார்க்கான ராஜேஸ்வரி(52) பணியாற்றி வந்தார்.அப்போது அவருக்கு காலை 11.30 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.உடனே அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


புறநகர் பகுதிகளிலும் பழுது 


திருச்சி புறநகர் பகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய உடன் தொடக்கத்தில் குறைவான வாக்காளர்கள் வந்து வாக்களித்தனர். இதில்முசிறி தொகுதி காமவெட்டி, மணப் பாறை தொகுதி கன்னிப்பட்டி, மணிகண்டம் தொகுதி ஸ்ரீரங்கம் பூங்கொடி,லால்குடி எசனைகோரை, மணப்பாறைதொகுதிக்குட்பட்ட அனியாப்பூர், கோவில்பட்டி காமநாயக்கன் பாளையம் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய உடன் வாக்கு இயந்திரம் திடீரென பழுந்தடைந்தன. இதனால் சுமார் 1.30 மணி நேரம் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் இருந்தனர். வாக்கு இயந்திரங்கள் உடனடியாக சரிசெய்யப்படாத காரணத்தால் அதிருப்திடைந்த பொதுமக்கள் சிலர் கண்டன கோஷமிட்டனர்.திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதியம் 3 மணி நிலவரப்படி 57.41 சதவீதம் வாக்கு பதிவாகின.திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் 62.50சதவீதமும், திருச்சி மேற்கு தொகுதியில் 51.40 சதவீதமும், திருச்சி கிழக்கு தொகுதியில் 51.49 சதவீதமும், திருவெறும்பூர் தொகுதியில் 54.59 சதவீதமும், கந்தர்வகோட்டை தொகுதியில் 60.99 சதவீதமும், புதுக்கோட்டை தொகுதியில் 57.41 சதவீதமும் பதிவாகின.


நரிக்குறவர்கள் ஆர்ப்பாட்டம்


திருச்சி அடுத்த துவாக்குடி அருகே தேவராயநேரியில் உள்ள நரிக்குறவ இன மக்களின் ஒரு பிரிவினருக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்து விட்டு மற்றொரு பிரிவினருக்கு பணம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைகண்டித்தும், அடிப்படை வசதிகள்செய்து தர வேண்டும். நரிக்குறவர் களை எஸ்டி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.




;