தஞ்சாவூர், டிச.27- தஞ்சாவூர் பழைய பேருந்து நிலை யம் அருகில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கண்ணாடி மூலம் வியாழக்கிழமை அன்று பொதுமக்கள் சூரிய கிரக ணத்தை பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். தஞ்சாவூர் திருமகள் மேல்நிலைப் பள்ளி, சி.எஸ். மெட்ரிக்குலேஷன் பள்ளி, கண்ணந்தன்குடி மேலையூர் அரசு பள்ளி, பட்டுக்கோட்டை அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கும்ப கோணம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆகிய பள்ளிகளிலிருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் சூரிய கிரகணத்தை, முழுமையாக கண்டு அறிவியலின் உண்மை தன்மை நிருபிக்கப்பட்டதை நேரடியாக பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில், சூரிய கிரகண நிகழ்ச்சிகளைக் காண தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் லெ.முருகன் மற்றும் மாநில துணைத் தலைவர் முனைவர் வெ.சுகுமாரன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்தி ருந்தார்கள்.
கரூர்
கரூர் பரணிபார்க் கல்விக் குழுமமும், பாரத சாரண சாரணியர் இயக்கம் - பரணி பார்க் சாரணர் மாவட்டமும் இணைந்து ‘சூரிய கிரகண வானியல் திருவிழாவை’ கரூர் பரணி பார்க் கல்வி வளா கத்தில் கொண்டாடினர். பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் ராம சுப்பிரமணியன் தலைமை தாங்கி னார். பரணி கல்வி குழும தாளாளர் எஸ். மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகனரங்கன் கலந்து கொண்டனர். சூரிய கிரகணம் நிகழ்வின் வானியல் மற்றும் அறிவி யல் முக்கியத்துவத்தை முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் விளக்கிக் கூறினார். பின்னர் கண்ணாடிகள் உதவியுடன் அனைவரும் சூரிய கிரக ணத்தை கண்டனர். நிகழ்வில் பரணி பார்க் கல்வி குழுமத்தைச் சேர்ந்த சுமார் 2500 மாணவ- மாணவியர் மற்றும் பரணி பார்க் சாரணர் மாவட்டத்தைச் சேர்ந்த 200 சாரண ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பரணி பார்க் பள்ளி முதல்வர் சேகர், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, எம்.குமாரசாமி கல்வி யியல் கல்லூரி முதல்வர் சாந்தி, பரணி பார்க் சாரணர் மாவட்ட செய லர் பிரியா மற்றும் துணை முதல்வர் கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என மொத்தம் 3000 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்ட னர். இந்நிகழ்வில் பங்கு பெற்ற அனை வருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்க கரூர் மாவட்ட கிளை உதவி யுடன் கண்ணாடிகள் வழங்கப் பட்டன.
கரூர்
கரூர் மாவட்டம், காந்தி கிராமத்தில் உள்ள விளையாட்டு மை தானத்தில் கடந்த வியாழக்கிழமை யன்று பொதுமக்கள் மாணவ- மாணவிகள் பார்ப்பதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டக் குழு சார்பில் நெருப்பு வளைய சூரியனின் அற்புதமான காட்சியை காலை 8 மணி முதல் 11 மணி வரை ஏற்பாடு செய்தனர். ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் கிரக ணத்தை பார்த்து ரசித்தனர். மேலும் 10 ஆயிரம் அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு சூரிய கிரகணத்தை பார்க்கும் பாது காப்பு கண்ணாடி முன்னதாகவே வழங்கப்பட்டது. இந்த மாணவர்கள் மூலம் அவர்களது குடும்பத்தில் உள்ள நபர்கள் என சுமார் 1 லட்சம் பேர் சூரிய கிரகணத்தை பார்த்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஐ.ஜான்பாஷா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் எம்.சுப்ரமணி யன், மாவட்ட செயலாளர் கே.சக்தி வேல், மாவட்ட நிர்வாகிகள் பொன் ஜெயராம், இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.