கும்பகோணம் ஜூன் 16- கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பனந்தாளில் பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்து அதிக மதிப்பெண் பெற்ற 60 மாணவ- மாணவிகளுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியன் ஊக்கத்தொகையும், நினைவு பரிசும் வழங்கினார். திருப்பனந்தாள் திமுக ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மாணவ- மாணவிகளுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.