தஞ்சாவூர், ஜூன் 19- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் காட்டாற்றில் மணல் அள்ளி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் மணல் ஏற்றி வந்த தொழி லாளர்களின் மாட்டு வண்டியை தடுத்து நிறுத்திய பேராவூரணி காவல்துறை யினர், வண்டியின் டயரில் உள்ள காற்றை பிடுங்கி விட்டும், மண்வெட்டி மற்றும் மணல் அள்ளும் சட்டி ஆகிய வற்றை பறித்துக் கொண்டும் சென்ற தாக கூறப்படுகிறது. இந்நிலையில் பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலட்சுமியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் வழக்கறி ஞர் வீ.கருப்பையா தலைமையில் வி. நீலகண்டன், கோ.பெத்தையன், ரா. பக்கிரிசாமி, சுரேஷ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழி லாளர்கள் சந்தித்து, 50க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை நேரில் அளித்த னர். அதில், “பேராவூரணி சுற்றுவட்டா ரப் பகுதிகளைச் சேர்ந்த நாங்கள் அடிப்படையில் விவசாயிகள். கடந்த 4 ஆண்டுகளாக விவசாயம் பொய்த்துப் போன நிலையில் எங்களது வாழ்வா தாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. கால்நடைகளுக்கும் தீவனம் அளிக்க முடியாத நிலையில் தவித்து வருகிறோம். குடும்பம் நடத்த எந்த வருமானமும் இல்லாத நிலையில், கடன் பெற்று மாட்டு வண்டிகள் வாங்கி, புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு, வாடகைக்கு மணல் அள்ளி கொடுத்து, அதில் கிடைக்கும் சொற்ப தொகையில் குடும் பம் நடத்தி வருகிறோம். இந்நிலையில் பேராவூரணி காவல்துறையினர் மாட்டு வண்டிகளை வழிமறித்து, டயர்களை வெட்டி விடுவது, காற்றை பிடுங்கி விடுவது, பயன்படுத்தும் உபகரணங்களை பறித்து செல்வது என அராஜகமான முறையில் செயல் பட்டு வருகின்றனர்.
எனவே காவல்துறை அராஜ கத்தை தடுத்து நிறுத்தி, அன்றாட பிழைப்புக்காக வாடகைக்கு மாட்டு வண்டி தொழில் செய்து வரும் எங்கள் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும். இல்லையென்றால் ஜனநாயக வழி யில் அனைத்து மாட்டு வண்டி தொழி லாளர்களையும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலை ஏற்படும்” என கூறப்பட்டுள்ளது. சிஐடியு தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் விடுத்துள்ள அறிக்கையில், “பேராவூரணி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 500 க்கும் மேற்பட்ட ஏழைகளான, விவசாயம் பாதிக்கப்பட்டு, மாற்றுத் தொழில் தெரியாத நிலையில் மணல் எடுத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காத்திட, அவர்களுக்கென தனியாக மணல் குவாரி அமைத்து தர வேண்டும். அவர்கள் வாழ்வாதாரத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மேலும், காவல்துறையும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது பொய் வழக்குப் போடுதல், கைது செய்து துன்புறுத்துதல், வண்டிகளை சேதப் படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.