tamilnadu

img

கருவூலத்துறையை தனியார்மயமாக்குவதை கைவிடுக!

தஞ்சாவூர், ஜூன் 26- கருவூலத்துறையை தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் எம்.என்.சாந்தாராமன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.ரெங்கசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினார்.  ஊரக வளர்ச்சிச் துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கை. கோவிந்தராஜன், ஆரம்பப் பள்ளி ஆசி ரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப் பினர் கார்த்தி, தமிழ்நாடு கிராம உதவி யாளர் சங்க மாவட்டத் தலைவர் அ.கா. தங்கராசு ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மாநிலச் செயலாளர் ஆர். பன்னீர் செல்வம் நிறைவுரையாற்றி னார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.  கருவூலத்துறையை தனியார் மய மாக்குவதை கைவிட வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை மென்பொருள் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய, விப்ரோ நிறுவனத்திடம் அதி காரம் செலுத்தாமல், கருவூலத் துறை ஊழியர்களை கட்டாயப்படுத்தும் தமி ழக அரசை கண்டித்தும், இத்திட்டத் தில் உள்ள குறைபாடுகள் களையப்படும் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர் களின் ஊதியம் பழைய முறையிலேயே வழங்க வேண்டும். கருவூலங்கள் மூடப் படும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.