திருச்சிராப்பள்ளி, ஜூன் 14- உலக ரத்த கொடையாளர் தினம், புரட்சி யாளர் சேகுவேரா பிறந்தநாள் மற்றும் நெல்லை அசோக் நினைவு நாள் ஆகிய தினத்தையொட்டியும், கொரோனா ஊர டங்கு காலத்தில் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையிலும் திருச்சி மாநகர் வாலிபர் சங்க ரத்ததான கழ கம் மற்றும் அரசு ரத்த வங்கியுடன் இணைந்து ஜங்ஷன் பகுதி குழு சார்பில் கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ரத்த தான முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் 21 யூனிட்கள் ரத்ததானம் செய்த னர். முகாமிற்கு பகுதி செயலாளர் சேதுபதி தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் புவனேஸ் வரி, முன்னாள் மாநில துணைத் தலைவர் கோவி.வெற்றிச்செல்வன், மாநகர் மாவட்ட செயலாளர் லெனின், மாவட்ட தலை வர் சுரேஷ், பொருளாளர் ஜெயக்குமார், துணைத் தலைவர் சீனிவாசன், வங்கி ஊழியர் சங்க தலைவர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் தீன், யுவராஜ், அருணாச்சலம், செல்வா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரத்த தான கொடையாளர்களுக்கு மரக்கன்றுகள், சான்றிதழ்கள் மற்றும் ரூ.100 மதிப்பிலான வாகன எரிபொருள் கூப்பன் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். முகாமை ரத்ததான வங்கி ஊக்குவிப்பாளர் பாலச்சந்தர் ஒருங்கி ணைத்தார்.