tamilnadu

img

சாலை போக்குவரத்து சங்க கிளை துவக்க விழா

திருச்சிராப்பள்ளி, ஆக.26- திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் ஆர்.புதுப்பட்டி யில் சாலை போக்குவரத்து சங்க புதிய கிளை துவக்க விழா மற்றும் சங்க கொடியேற்றும் நிகழ்ச்சி ஞாயிறு அன்று நடைபெற்றது.  விழாவிற்கு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜி.முத்துக்குமார் தலைமை வகித்தார். விழாவில் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க செந்தில்குமார், மணி, ஒன்றிய தலைவர் தங்கராஜ், சிபிஎம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.