tamilnadu

img

அதிராம்பட்டினம் குளங்களுக்கு நீர் நிரப்பக் கோரிக்கை

தஞ்சாவூர், ஜன.14- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள நசுவினி ஆற்று ஓடையிலி ருந்து வெளியேறும் உபரிநீரை பம்பிங் மூலம் இரைத்து, வறண்ட குளங்களுக்கு தடையின்றி நீர் நிரப்புவதற்காக அதிராம் பட்டினம் பேரூராட்சி சார்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு பம்பிங் ஸ்டேஷன் அமைக் கப்பட்டது.  இதன் மூலம், ஆலடிக்குளம், செக்கடிக் குளம், மன்னப்பங்குளம், கருசமணி, புள்ளைகுளம் உள்ளிட்ட குளங்களுக்கு நீர் இரைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பம்பிங் மோட்டாரில் ஏற்பட்ட பழுதால் நீர் இரைப்பதில் தடை ஏற்பட்டது. இதை யடுத்து, அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.எச் அஸ்லம், பழுதடைந்து பம்பிங் மோட்டா ரை உடனடியாக சீர்செய்து, நீர் மட்டம் குறைந்து காணப்படும் குளங்களுக்கு உட னடியாக நீர் நிரப்ப வேண்டுமென அதிராம் பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷை திங்கட்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதில் அப்துல் ஜப்பார் உடனிருந்தார்.

;