நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 1475.55 மில்லி மீட்டர். இந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை பெய்துள்ள சராசரி மழையளவு 1013.82 மி.மீ.ஆகும். நவம்பர் மாதத்தில் மட்டும் 233.01 மி.மீ.ஆகும்.நடப்பு ஆண்டில் மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி செய்திட 37000 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 37259 ஹெக்டேர் சாதனை அடையப்பட்டுள்ளது. இதில் சராசரியாக 5652 ஹெக்டேர் மகசூல் பெறப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.