tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டி வழங்கல்

தஞ்சாவூர் செப்.14- தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள்(ஸ்கூட்டி) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் ரவீந்திரன் தலைமையில் 10 பயனாளி களுக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்க மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல உதவி அலுவலர் தெட்சிணாமூர்த்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு நடப்பு ஆண்டிற்கான அரசின் மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்து 66 பயனாளிகளுக்கு வழங்கினார். 

;