தரங்கம்பாடி: நாகை மாவட்டம் கொத்தங்குடி ஊராட்சி பனங்குடி கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் கிருஷ்ணன் என்பவர் வீடு கட்டிக் கொள்ள அய்யப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நெய்வாசல் கிராமத்தில் நடை பெற்றது. அறக்கட்டளையின் நிறுவன தலைவர் அய்யப்பன் சிங்கராசு நிதியுதவியை ஐயப்பன் கிருஷ்ணனுக்கு வழங்கினார். தலைமை செயலாளர் ஜெயகாந்தன், பொதுச்செயலாளர் பி.எஸ் அய்யப்பன், ஆர்.தெட்சிணாமூர்த்தி, ஊராட்சி தலைவர் தம்புமோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் சுற்றுவட்டார பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகளும் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டன.