தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், வீரசிங்கம்பேட்டை ஊராட்சியில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ஆட்சியர் ம.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திய லிங்கம் முன்னிலை வகித்தார். வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு கலந்து கொண்டார். விழாவில் பிரான்ஸ், இங்கிலாந்து, டென்மார்க், இத்தாலி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 48 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரத்தினசாமி, எம்.ஜி.எம்.சுப்பிர மணியன், ஒருங்கிணைந்த மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர்.காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், வீரசிங்கம்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.