tamilnadu

img

பைங்கால் குளம் சீரமைப்புப் பணி

தஞ்சாவூர், மே 22- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பைங்கால் ஊராட்சி பைங்கால் குளம் ரூ 32 லட்சத்தில் குடிமராமத்து திட்டத்தில் சீரமைக்கப்படுகிறது. இதனை, வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராவூரணி எம்எல்ஏ மா.கோவிந்தராசு தலைமை வகித்து, குடிமராமத்துப் பணியைத் தொடங்கி வைத்தார். ஒன்றிய தலைவர் சசிகலா ரவிசங்கர், ஒன்றியக் குழு உறுப்பினரும், அதிமுக ஒன்றியச் செயலாளருமான உ.துரை மாணிக்கம், ஊராட்சி தலைவர் அமுதா சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுந்தர், சங்கவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.