மன்னார்குடி, ஜூலை 4- இலவச குடிமனை அனுபவ இடத்திற்கு பட்டா, குடியிருக்க கான்கிரீட் வீடு மற்றும் பட்டா மாறு தல் கோரி மனுக்கள் பெறும் மற்றும் அதிகாரிகளிடம் அளிக்கும் இயக்கம் முத்துப்பேட்டையில். சிபிஐஎம் முத்துப்பேட்டை ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற இயக்கத்திற்கு நகரச் செய லாளர் சி.செல்லதுரை தலைமை வகித்தார். கட்சியின் ஒன்றிய செய லாளர் கு.பாலசுப்பிரமணியன், விதொச ஒன்றிய செயலாளர் பி.வி.கனகசுந்தரம் முன்னிலை வகித்தனர். அரசு அறிவித்துள்ள இலவச குடிமனை மற்றும் பட்டா, குடியிருக்க கான்கிரீட் வீடு அனுபவ இடம் பல் வேறு புறம்போக்கு இடங்கள் கோயில் மற்றும் அறக்கட்டளை இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா கோரும் 741 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் இனம் வாரியாக தொகுக்கப்பட்டு இயக்கம் நடைபெற்ற இடத்திற்கு வந்திருந்த வரு வாய்துறை அதிகாரிகளிடம் நேரில் அளிக்கப்பட்டது. ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கட்சி கிளை செயலாளர்கள் உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.