tamilnadu

பெரம்பலூர் ,மன்னார்குடி மற்றும் அரியலூர் முக்கிய செய்திகள்

2 மாதம் சிறை

பெரம்பலூர், ஜூன் 25- பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூர் நடுத்தெருவை சேர்ந்தவர் நைனப்பன் (63), பால் வியாபாரி. அதே ஊரைச் சேர்ந்தவர் ரமேஷ்(53), லாரி உரிமை யாளர். ரமேஷ் தனது தொழிலை அபி விருத்தி செய்வதற்காக நைனப்பனிடம் 2014-ம் ஆண்டு ரூ.3 லட்சம் கடன் பெற்றா ராம். இதன்பின் கடன் தொகையை திருப்பித் தருமாறு நைனப்பன், ரமேஷி டம் பலமுறை கேட்டார்.  அதற்கு ரமேஷ், தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலை கொடுத்தார். அந்த கணக்கில் பணமின்றி காசோலை திரும்பி வந்தது. இதனால் பாதிப்பிற்குள்ளான நைனப் பன், ரமேஷ் மீது பெரம்பலூர் குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்பிரசாத், செக் மோசடி வழக்கில் ரமேஷிற்கு 2 மாதம் சிறை தண்டனை, ரூ.3 லட்சம் இழப்பீட்டு தொகை மற்றும் இழப்பீட்டு தொகையை தர தவறும் பட்சத்தில் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்குமாறு கடந்  தாண்டு நவம்பர் 15-ந் தேதி தீர்ப்ப ளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ரமேஷ், பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதி பதி லிங்கேஸ்வரன், ரமேஷ் மீது குற்ற வியல் நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தார். ரமேஷிடம் இருந்து ரூ.3 லட்சம் இழப்பீடு தொகை யை வசூலித்து நைனப்பனுக்கு வழங்க வும், ரமேஷ் மீது காவல்துறை நடவ டிக்கைக்கும் உத்தரவு பிறப்பித்தார். 

ஆன்மீக விருது வழங்கல்  

மன்னார்குடி, ஜூன் 25-  திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் தர்மசவர்த்தினி அம்பிகா சமேத அகஸ்தீஸ்வர சுவாமி கோயிலில் நடை பெற்ற கும்பாபிஷேக விழாவில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் ஆன்மிக சேவைக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேவா சங்க துணைத் தலைவர்  திருநள்ளாறு ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமை வகித்தார்.  இதில் காரைக்கால் மாவட்ட ஆட்சி யர் ஏ.விக்ரந்த் ராஜாவுக்கு சிவசேவா சதுரர் விருதும், கர்நாடக துணை சபா நாயகர் எம்.கிருஷ்ண ரெட்டிக்கு சனாதன தர்ம ரட்சகர் விருதும் வழங்கப்பட்டது என அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரி யார்கள் சேவா சங்கம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்  

பெரம்பலூர், ஜூன் 25- பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ளது. எம்.ஆர்.எப் நிறுவனம், டாடா இன்ஸ்டிடியூட் சோசி யல் சயின்ஸ் சார்பு நிறுவனத்தின் சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ மற்றும் பொறியியல், டிப்ளமோவில் எலக்ட்ரிக் கல் -ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். எனவே விருப்ப மும் உள்ள நபர்கள் அன்று காலை 10 மணிக்கு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

மாட்டு வண்டி உரிமையாளர்கள் கோரிக்கை 

அரியலூர், ஜூன் 25- அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாட்டு வண்டிகள் உரிமையாளர்களின் கலந்தாய்வு கூட்டம் தா.பழுரில் சங்க மாவட்ட செயலாளர் மதியழகன் தலை மையில் நடைபெற்றது. விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் எம். இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், எ.தங்கராசு உள்பட மாட்டுவண்டி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜூலை 2-ந் தேதி ஆட்சியர் அலு வலகம் முன்பு மணல் குவாரி திறக்கும் வரை மாட்டு வண்டி உரிமையாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருப் பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

;