திருச்சிராப்பள்ளி, ஜூலை 24- பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 10 மா தங்களாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். பணி யின் போது இறந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் இபிஎப், இஎஸ்ஐ தொகை ஆகியவற்றை உடனடி யாக அவர்களது குடும்பங்க ளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொலை தொ டர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளி யன்று திருச்சி மண்டல தொலை தொடர்புத்துறை பிஜிஎம் அலுவலக வளா கத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பிஎஸ்என்எல்இயு மாவட்ட தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயலா ளர் அஸ்லம்பாஷா, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ், மாவட்ட செயலாளர் முபா ரக்அலி ஆகியோர் பேசினர்.