திருச்சிராப்பள்ளி, மார்ச் 24- திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஆர்.ஆனந்த் தெரிவித்திருப்பது: திருச்சி மண்டல கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அலுவலகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருச்சி, தஞ்சை யில் இயங்கி வரும் பாஸ்போர்ட் சேவை மையங்களு க்கும் (பிஎஸ்கே) மார்ச் 24 முதல் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் பாஸ்போர்ட் புதுப்பித்தல் மற்றும் புதிதாக எடுத்தல், தொடர்புடைய பணி களுக்காக முன்பதிவு செய்திருந்தவர்கள், ஏப்ரல் 4 ஆம் தேதிக்குப் பின்னர் வேறு தேதிகளில் மாற்றி பதிவு செய்து கொள்ளலாம். அதற்காக கட்டணங்கள் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஏற்கெனவே முன்பதிவு செய்த பாஸ்போர்ட் இணையதளத்தில் சென்று தேதியை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். வழக்கமாக வழங்கப்படும் 3 வாய்ப்புகள் மட்டு மின்றி எத்தனை முறை வேண்டுமானாலும் தேதியை மாற்றி அமைத்துக் கொள்ளும் வகையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் பிரச்ச னைகள் ஏற்படும் நிலையிலோ அல்லது மேலும் இவை குறித்த விவரங்களைப் பெறவோ 180025 81800 என்ற இலவச அழைப்பிலோ, திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை 0431- 2707203, 2707404 என்ற எண்களிலோ, கட்செவி (வாட்சாப்) 75985-07203 என்ற செல்லிடப் பேசியிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.