tamilnadu

img

மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக எஸ்.அந்தோணி தேர்வு

திருச்சி:
தமிழ்நாடு மீன்பிடிதொழிற்சங்க கூட்டமைப்பின் (சிஐடியு) மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. மாநில துணை தலைவர் எஸ்.சுப்ரமணியம் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் வி.குமார், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, மாநில நிர்வாகிகள் எஸ்.அந்தோணி, ஜி.ஜீவா, பி.மனோகரன், ஆர்.பேச்சிமுத்து, ஆர்.லோகநாதன், கருணாமூர்த்தி, எஸ்.ஜெய்சங்கர், கே.அலெக்சாண்டர், பி.டிக்கார்தூஸ் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக செயல்பட்ட சி.ஆர்.செந்தில்வேல்சங்க விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் பொதுச்செயலாளர் மற்றும் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டார். மாநில பொதுச் செயலாளராக எஸ்.அந்தோணி தேர்வு செய்யப்பட்டார். மீனவர்களுக்கு எதிரான மசோதா மீனவர்களின் கருத்து கேட்காமலேயே மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீன்பிடிதொழிலையும், கடற்கரையையும் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைக்க உதவும் இம்மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்தமசோதாவுக்கு எதிராக அனைத்துப் பகுதி மீனவர்களை திரட்டி போராட்டங்கள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

;