tamilnadu

img

அமைப்பு சாரா தொழிலாளர் ஆலோசனைக் கூட்டம்

 திருச்சிராப்பள்ளி: திருச்சி மண்டல அளவிலான சிஐடியு அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிறு அன்று வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில செயலாளர் குமார், மாநில தலைவர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் தமிழக கட்டுமான நல வாரிய கூட்டத்தில் தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பண பயன்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை மானியத்துடன் கூடிய வீட்டுவசதி வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்து அதனை உடனே அமலாக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 1ம் தேதி தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோ சிக்கப்பட்டது. பின்னர் திருச்சி மண்டலத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்க ணக்கானோர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.  கூட்டத்தில் திருச்சி மாநகர், புறநகர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அமைப்பு சாரா தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.