tamilnadu

குடிமராமத்து பெயரில் புது மோசடி : கொள்ளிடம் ஊராட்சிக் குளங்களில் மண் எடுக்க அனுமதி வழங்குவதில் பாரபட்சம்

சீர்காழி, செப்.6-   நாகை மாவட்டம் கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள 42 ஊராட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம ங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிக் குளங்கள் உள்ளன. இதில் சென்ற வருடம் 200 குளங்கள் வெட்டப்பட்டு மண் எடுக்க அனுமதியளிக்கப்பட்டது. மீதமுள்ள ஊராட்சிக் குளங்களுக்கு சில தின ங்களுக்கு வருவாய்த் துறை மூலம் அனுமதி அளிக்கப்பட்டு மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஊராட்சியிலும் பாரபட்சமாக குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே மண் எடுத்துச் செல்ல அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. இதனால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ஊராட்சிக் குளங்களில் மணல் மற்றும் மண் எடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் ஒவ்வொரு ஊராட்சியைச் சேர்ந்த மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குளத்தில் மண் மற்றும் களிமண் எடுப்பவர்கள் சில அதிகாரிகள் உடந்தையுடன் வெளியூர்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர். குடிமராமத்து என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக குளங்களில் மண் எடுத்து விற்பனை செய்வோர் மீதும், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் சங்க செயலாளர் பாக்யராஜ், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.