tamilnadu

img

நாகப்பட்டினம் மற்றும் கும்பகோணம் முக்கிய செய்திகள்

மயிலாடுதுறை மாவட்ட உருவாக்கம்: கருத்துக் கேட்புக் கூட்டங்கள்

நாகப்பட்டினம்,  ஜூலை 31- தமிழகத்தில் 38-வது புதிய மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாகிடத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை நாகப்பட்டினத்திலும் மயிலாடுதுறையிலும் பொதுக் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. தமிழகக் கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் மாநில வருவாய் நிர்வாக ஆணையர் கே.பவீந்திரரெட்டி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டங்களில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர், மயிலாடுதுறை மாவட்டத் தனிச் சிறப்பு அலுவலர் இரா.லலிதா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் புதிய வருவாய்க் கோட்டமாக அமைத்தல், புதிய கல்வி மாவட்டம் அமைத்தல், வேளாங்காண்ணி சட்டமன்றத் தொகுதி உருவாக்குதல், திருமருகல், தலைஞாயிறு ஆகியவற்றைப் புதிய வருவாய் வட்டங்களாக உருவாக்குதல், திருக்குவளையிலிருந்து வேளாங்கண்ணியைப் பிரித்து நாகை வட்டத்தில் இணைத்தல், மாவட்டம் பிரியும்போது, நாகை மாவட்டம் சிறியதாக ஆகிவிடும் என்பதால், அருகிலுள்ள மாவட்ட எல்லைகளிலிருந்து சில பகுதிகளை நாகை மாவட்டத்தில் சேர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார்கோயில், கொள்ளிடம் ஆகியவற்றைப் புதிய வருவாய் வட்டங்களாக அமைத்தல், அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு வேளாண்மைக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம் அமைத்தல், புதை சாக்கடைத் திட்டத்தை நிறைவாக்குதல், தலைஞாயிறு அரசு நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி சர்க்கரை ஆலையைப் புனரமைத்து இயக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டன.

அரசவனங்காடு ஊராட்சி வசம் வந்த பாரம்பரியமிக்க பெருமாள் குளம்

திருவாரூர், ஜூலை 31- திருவாரூர் மாவட்டம் குடவாசல் காவல் சரகம், கொர டாச்சேரி ஒன்றியத்தைச் சேர்ந்த அரசவனங்காடு ஊராட்சியில்  ஆளுங்கட்சி பிரமுகர் மற்றும் அவரது நண்பர்கள் ஆக்கி ரமிப்பில் இருந்த பாரம்பரியமிக்க பெருமாள் குளம் சிபிஎம்  ஊராட்சிமன்ற தலைவரின் முயற்சியால் மீண்டும் ஊராட்சியின் வசம் வந்துள்ளது. இந்த ஊராட்சியின் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எல்.சுலோட்சனா தேர்வு செய்ய ப்பட்டு பணியாற்றி வருகிறார். ஊராட்சிமன்ற உறுப்பினர்கள்  அனைவரும் இவருக்கு உறுதுணையாக இருந்து வருகின்ற னர். மேற்கண்ட குளம் கீரங்குடி ஊராட்சிமன்ற தலைவர் ராஜ வேல் (அதிமுக) மற்றும் அவரது நண்பர்கள் வசம் இருந்து  வந்தது. போலியான ஆவணங்களை வைத்துக் கொண்டு மீன்  பிடித்து சம்பாதித்து வந்தனர். இந்த குளத்தை இவர்களிட மிருந்து மீட்க ஊராட்சிமன்ற தலைவர் முயற்சி மேற்கொ ண்டார்.  கட்சியும் ஊர் மக்களும் ஏனைய அரசியல் கட்சிகளும் இவ ருக்கு உறுதுணையாக இருந்தன. மாவட்ட ஆட்சியர் உறுதி யான நடவடிக்கை எடுத்ததால் தற்போது பெருமாள் குளம் ஊராட்சி வசம் வந்துள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ்  தற்போது இக்குளம் தூர்வாரப்பட்டுள்ளது. போலி ஆவ ணங்கள் மூலம் மீன்பாசி குத்தகை எடுத்து குற்றச் செயலில்  ஈடுபட்ட அதிமுக பிரமுகர் மற்றும் அவரது நண்பர்கள் மீது  திருவாரூர் வட்டாட்சியரின் புகாரின் பேரில் குடவாசல் காவல்நி லையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை  ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜூலை 31- கொரோனா பரவல் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழி யர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல், நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுள்ள வளர்ச்சித் துறை ஊழி யர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் வழங்குதல், ஜாக்டோ -  ஜியோ வேலைநிறுத்தப் பங்கேற்புக் காரணமாகப் பிற ப்பிக்கப்பட்டுள்ள 17ஆ குற்றக் குறிப்பாணைகளை உடன டியாக ரத்து செய்தல் உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கருப்புப் பட்டை அணிந்து நாக ப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கி ழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.ஜோதிமணி தலைமை யில், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழ கன், புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநிலத் தலைவர்  ப.அந்துவன்சேரல், சங்க மாநிலச் செயலாளர் அ.சவுந்தர பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

கபசுர குடிநீர் வழங்கல்

கும்பகோணம், ஜூலை 31- தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோ வில் பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் ஓம் சக்தி ஆட்டோ  ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் சங்கம் (சிஐடியு) தானாக  முன்வந்து சுமார் 500 பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் கொடுத்து விழிப்புணர்வை ஏற்ப டுத்தின. சிஐடியு தஞ்சை மாவட்ட செயலாளர் ஜெயபால், ஆட்டோ சங்க தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டம்

தஞ்சாவூர், ஜூலை 31- தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க த்தின் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர்  மாவட்டம், பாபநாசம் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் ஆர்.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், நடப்பு ஆண்டுக்கு 650 உறுப்பினர் பதிவை ஆக ஸ்ட் 15-க்குள் முடிப்பது, 50 ‘உரிமைக்குரல்’ சந்தா சேர்ப்பது என முடிவெடுக்கப்பட்டது. ஒன்றியச் செயலா ளர் மணிகண்டன் மற்றும் அனைத்து ஒன்றியக்குழு உறு ப்பினர்கள் கலந்து கொண்டனர்.       அம்மாபேட்டை ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலா ளர் வி.ரவி உட்பட அனைத்து ஒன்றியக்குழு உறுப்பி னர்களும் கலந்து கொண்டனர். 500 உறுப்பினர் பதி வும், 50 உரிமைக்குரல் சந்தாவும் போட்டுவது என முடி வெடுக்கப்பட்டது. இரண்டு கூட்டத்திலும் மாவட்டச் செய லாளர் பி.எம்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசி னார்.

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு யுனைடெட் இந்தியா ரூ.15 லட்சம் இழப்பீடு

கும்பகோணம், ஜூலை 31- கடந்த பிப்ரவரி மாதம் தஞ்சாவூர்-நாகப்பட்டினம் பிரதான  சாலையில் அம்மாபேட்டை வழிப்பாலம் அருகில் தஞ்சை மாவ ட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த சுவாமி சிற்ப வேலை செய்து  வரும் பாலமுருகன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் மரணம் அடைந்தார்.  அவர் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியை தவிர்த்து அரசு  நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி  நிறுவனத்தில் தனது இரு சக்கர வாகனத்தை காப்பீடு செய்திருந்தார்.  இந்நிலையில் விபத்தில் இறந்த பாலமுரு கனின் மனைவி ரேணுகாதேவி மற்றும் குடும்பத்தினர்  இழப்பீடு  கேட்டு ஆவணங்களை சமர்ப்பித்திருந்தனர். இதில், கும்ப கோணம் கிளை யுனைடெட் இந்தியா நிறுவன ஊழியர்கள் துரித நடவடிக்கை எடுத்து குறைந்த காலத்தில் தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகை ரூ.15 லட்சத்திற்கான காசோலையை கும்ப கோணம் கோட்ட அலுவலகம் சார்பாக இறந்தவரின் மனைவி  மற்றும் இரு மகள்களிடம் வழங்கினர். இத்தகவலை மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் ஜவஹர் தெரி வித்துள்ளார்.

ஜாக்டோ - ஜியோ கோரிக்கை மனு; மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி

நாகப்பட்டினம், ஜூலை 31- நாகை மாவட்ட ஜாக்டோ - ஜியோ சார்பில் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர்கள், நாகை மாவட்ட ஜாக்டோ-ஜியோ தலைவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் இந்து மதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோரை  நேரில் சந்தித்துக் கோரிக்கைகளை நிறைவேற்ற அர சுக்குப் பரிந்துரைக்குமாறு வேண்டி கோரிக்கை மனு  அளித்தனர். இந்த மனுவில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து  செய்தல், நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறை வேற்றுதல், ஜாக்டோ-ஜியோ மாநில நிர்வாகிகளைத் தமிழக அரசு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்து தல் உள்ளிட்டவற்றை வலியுறுத்திக் கோரிக்கை விடுக்க ப்பட்டிருந்தது.   முன்னதாக, அரசு ஊழியர் சங்கக் கூட்ட அரங்கில்,  தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றப் பொதுச்  செயலாளர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம், அகில இந்திய  அரசு ஊழியர் சம்மேளன முன்னாள் தேசியத் தலை வர் தோழர் ஆர்.முத்துசுந்தரம் ஆகியோருக்கு நினை வஞ்சலி நிகழ்ச்சி அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் அ.தி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜூலை 31- தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 24 ஆம் தேதி முதல் 9  அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இதையடுத்து பாபநாசத்தில் தஞ்சை மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பயிர்க் கடன்களை சங்கங்களே நேரடியாக வழங்க அனுமதிக்க வேண்டும், வருமான வரித்துறையின் 2 சதவீத டிடிஎஸ் வரி யை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர். பாபநாசத்தை சுற்றியுள்ள  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளர்களும், பணியாளர்களும் கலந்து  கொண்டனர்.