திருச்சிராப்பள்ளி, மார்ச் 4- திருச்சி மாவட்ட வருவாய்த்துறை சார்பில் வாரம்தோ றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மா திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி மார்ச் 6 அன்று திருச்சி கிழக்கு சிந்தா மணி, திருச்சி மேற்கு பிராட்டியூர் கிழக்கு, திருவெறும்பூர், கிருஷ்ணசமுத்திரம், ஸ்ரீரங்கம் நவலூர் குட்டப்பட்டிடு, பெரியநாயகி சத்திரம், மணப்பாறை முகவனூர் வடக்கு, மருங்காபுரி செவந்தாம்பட்டி, லால்குடி பெரியகுறுக்கை, மண்ணச்சநல்லூர், மேல்பத்து, முசிறி, பிள்ளாப்பாளையம், துறையூர் கோட்டப்பாளையம் கிழக்கு, தொட்டியம், நாகை யாநல்லூர் ஆகிய கிராமங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார்.